2ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.27ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். நடப்பாண்டு 2ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த செப்டம்பர் 25ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்டதாரிகள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அக்டோபர் 20, நவம்பர் 1ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.

Related Stories: