ஐப்பசி மாத முகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு

சென்னை: ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், ஐப்பசி மாத சுப முகூர்த்த தினங்களில் அதிகளவில் புதிய முன்பதிவுகள் அதிகரிக்கும். இதனால், தினசரி வழங்கப்படும் டோக்கன்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு இன்று (அக்.24) மற்றும் அக்.27ம் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வழக்கமாக 100 டோக்கன்களை வழங்கும் அலுவலகங்கள் இந்த 2 நாட்களுக்கு 150 டோக்கன்களை வழங்கும். அதேநேரத்தில் பொதுவாக 200 டோக்கன்களை வழங்கும் அலுவலகங்கள் 300 டோக்கன்களாக அதிகரிக்கும். பத்திர பதிவுகளின் அளவு பொதுவாக அதிகமாக இருக்கும் 100 அதிக தேவை உள்ள துணை பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் சாதாரண மற்றும் தட்கல் டோக்கன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் சொத்து பதிவுகளை சீராக செயல்படுத்தும் மேலும் பொதுமக்களுக்கான காத்திருப்பு நேரமும் குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: