லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தலித் முதியவர் சிறுநீர் கழித்த இடத்தை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் ககோரி பகுதியில் உள்ள ஷீல்ட்லா மாதா மந்தீரில் தலித் முதியவரான ராம்பால் ராவத் என்பவர் தண்ணீர் அருந்தியதாக தெரிகின்றது. அப்போது அவருக்கு இருமல் ஏற்பட்டதால் தற்செயலாக சிறுநீர் கழித்துவிட்டதாக தெரிகின்றது.
இந்நிலையில் அங்கிருந்த சுவாமி காந்த் என்பவர் முதியவர் சிறுநீர் கழித்துவிட்டதாக கூறி கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் அந்த இடத்தை முதியவரை நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இது குறித்து ராம்பால் குடும்பத்துக்கு தெரியவந்தது. ராம்பால் சிறுநீர் கழித்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து பிரதான கோயில் சுமார் 40மீட்டர் தொலைவில் இருப்பதாக அவரது பேரன் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுவாமி காந்தை கைது செய்துள்ளனர்.
