மெகுல் சோக்சிக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்கும்; மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பெல்ஜியம் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13ஆயிரம் கோடி நிதி மோசடியில், தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்சி வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் பெல்ஜியம் அதிகாரிகளால் சோக்சி கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த சோக்சி, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால் சித்ரவதை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றும் தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மெகுல் சோக்சியின் மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காமல் போகலாம் என்று சோக்சி முன்வைத்த வாதங்களை நிராகரித்தது. அவர் இந்தியாவில் நீதி மறுக்கப்படலாம், சித்ரவதை அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது மற்றும் இழிவாக நடத்தப்படுவது, தீவிரவமான ஆபத்தை அவர் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்கிறார் என்பதை நம்புவதற்கு இல்லை என்று உத்தரவில் கூறப்பட்பட்டுள்ளது.

Related Stories: