விடிய விடிய கனமழையால் மண்சரிவு திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

திருமலை: திருப்பதி, திருமலையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நேற்று காலை திருமலை இரண்டாவது மலைப்பாதை சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. 9வது கிலோமீட்டரில் ஏற்பட்ட மண்சரிவால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான பொறியியல்துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்று சரிந்த பாறைகளை அகற்றினர். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தொடங்கியது. இருப்பினும் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: