கெங்கவல்லி, அக்.18: வீரகனூர் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், மாணவர்கள் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். சிறப்பு நிலைய அலுவலர் செல்லப்பாண்டியன், மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகை நாளில் எளிதில் தீப்பிடிக்கும் துணிகளை அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது, அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிசை வீடுகள் உள்ள பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கெங்கவல்லி தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் ஏழுமலை, பள்ளி தலைவர் லட்ஷமி நாராயணன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பிரபா, இயக்குனர்கள் அருண் குமார், ராஜா, ராஜேஸ்வரி மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு
- தீபாவளி
- ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி
- Kengavalli
- வீரகனூர் ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- சிறப்பு
- அதிகாரி
- செல்லப்பாண்டியன்
