சென்னையில் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

சென்னை: இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. கோடம்பாக்கம் நாகார்ஜுனா 2வது தெருவில் உள்ள ரங்கநாதன் அபார்ட்மெண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் ரங்கநாதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்ட 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னையில் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தொடர்புடைய அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் கார்த்திகேயன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: