கொங்கணாபுரம் சந்தையில் ₹4 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி, டிச.27: கொங்கணாபுரம் சனி சந்தையில், நேற்று இடைப்பாடி, ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6000 செம்மறி, வெள்ளாடுகள், பந்தய சேவல்கள், காகம் கிரி மயில் மற்றும் 800 சாதா சேவல், கோழி 2000 மற்றும் 110 டன் காய்கறிகள் என விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகளவில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் வந்திருந்தனர். அதிகாலையில் இருந்து மக்கள் கூடியதால், திருவிழா போல் களை கட்டியது. இதில், 10 கிலோ எடையுள்ள செம்மறி, வெள்ளாடு விலை ₹5,800 முதல் 7,100 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு 11,200 முதல் 13 ஆயிரம் வரை விலை போனது. வளர்ப்பு குட்டி ஆடு ₹1,400 முதல் ₹2000 வரையும், பந்தய சேவல் குறைந்தபட்சம் ₹900 முதல் ₹6000 வரை விலை போனது. சேவல்₹100 முதல் ₹900 வரை விலை போனது. நேற்று கூடிய சந்தையில், மொத்தம் ₹4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: