பொன்னமராவதியில் அதிமுக சார்பில் ரத்ததானம்

 

 

பொன்னமராவதி, அக். 7: பொன்னமராவதியில் அதிமுக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்டச்செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். தொழிலதிபர் குமாரசாமி முன்னிலை வகித்தார். இதில் பொன்னமராவதி பேரூராட்சிக்கவுன்சிலர் சந்திராசுரேஷ் தம்பதியர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ரத்தம் வழங்கினர்.
இந்த முகாமில் ஒன்றியச்செயலாளர்கள் காசிகண்ணப்பன், ஆலவயல் சரவணன், அரசமலை முருகேசன், திருச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சுரேஷ்குமார், பழனிச்சாமி, காசிராமன் நிர்வாகிகள் ஆகாஷ், அம்பி, வேந்தன்பட்டி பழனியப்பன், கல்லம்பட்டி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: