விஜய் வீட்டிலேயே முடங்கி கிடப்பது அரசியல் தலைவருக்கு நல்லதல்ல: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற ஒரு அரசியல் கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறை.

விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை ஜனநாயக ரீதியாக கண்டுபிடிக்க வேண்டும். நீதிபதிகளே சுயமாக விசாரித்தால் தான் உண்மையை வெளியே கொண்டு வர முடியும். விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும், சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: