தலைகீழாக லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம், செப்.27: ஆசனூர் அருகே லாரி தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பழைய பேப்பர் மற்றும் அட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலைப்பேட்டை செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.

லாரியை பல்லடத்தை சேர்ந்த மேத்யூ ஜோஸ் (34), ஓட்டினார். இந்த நிலையில் சாலை வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர வனப்பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். லாரியை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

 

Related Stories: