கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பில் நடந்த ஊழல் தொடர்பாக அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேற்கு வங்க சீர்திருத்த சேவைகள் அமைச்சர் சந்திரநாத் சின்ஹா. இவர் ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் செய்ததாகவும், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று 2வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது அவரது வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரித்தனர்.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் புகார் மேற்குவங்க அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை
- அமலாக்க இயக்குநரகம்
- மேற்கு வங்கம்
- அமைச்சர்
- கொல்கத்தா
- சந்திரநாத் சின்ஹா
- மேற்கு வங்க சீர்திருத்த சேவைகள்
