ஜெயங்கொண்டம், செப். 25:ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை
பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026-ன் கீழ், அழகாபுரம் ஊராட்சி,அகரம் ஆதிதிராவிடர் தெருவில்,ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில்,வடிகால் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைத்தல்,
ஓலையூர் ஊராட்சி,குடிகாடு மேலத்தெருவில்,குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்,ஆகியவற்றை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்நாதன், ஆரோக்கிய மேரி,ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
