சட்டசபையில் எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்து புதுவை-கடலூர் சாலையில் திமுக, விசிக மறியல்

பாகூர், செப். 19: புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏக்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி – கடலூர் சாலை கன்னியக்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, தி.மு.க., விவசாய தொழிலாளர்கள் அணி மாநில அமைப்பாளர் தவமுருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுவை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: