துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நேற்று, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாக். துவக்க வீரர் சயீம் அயூப் முதல் ஓவரில் ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஜுனைத் சித்திக் வீசிய 3வது ஓவரில் ஷாகிப்ஸாதா ஃபர்கான் (5 ரன்) வீழ்ந்தார். 7 ஓவர் முடிவில் பாகிஸ்தான், 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தது. ஃபகார் ஜமான் 19, கேப்டன் சல்மான் ஆகா 14 ரன்னுடன் ஆடிக்கொண்டிருந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் ஜுனைத் சித்திக் 3 ரன் மட்டுமே தந்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
* பிசிபியால் லேட்டான போட்டி
இந்தியா – பாக். இடையிலான போட்டியின்போது, கைகுலுக்க வேண்டாம் என போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கூறியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), அவரை நீக்க வேண்டும் என ஐசிசியை வலியுறுத்தியது. அதற்கு ஐசிசி மறுத்ததால், போட்டிக்கு வர முடியாது என பாக். அணி அடம் பிடித்தது. ஒரு மணி நேர தாமதத்துக்கு பின், வேறு வழியின்றி பாக். அணியினர் மைதானத்துக்கு வந்தனர்.
