கலாச்சாரம், காலநிலை மாற்றம் குறித்து சென்னை பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கம்

 

சென்னை: கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் பிரபஞ்சம் தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. சென்னை மானுடவியல் துறை, வனமா கலை, கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் கலாச்சாரம், காலநிலை மாற்றம், பிரபஞ்சம் தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இதை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் தலைவரும், துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினருமான ஆர்ம்ஸ்ட்ராங் தொடங்கி வைத்தார்.

மானுடவியல் துறையின் தலைவர் தாமோதரன் தலைமையுரை ஆற்றினார். அப்போது, மானுடவியல் கண்ணோட்டத்தில் கலாச்சாரம், சுற்றுச்சூழல், பிரபஞ்சம் இடையேயிலான தொடர்புகளை ஆராயும் நோக்கில் கருத்தரங்கம் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். கலை இயக்குநர் அனிதா குஹா கருத்தரங்க மலரை வெளியிட்டார். நந்தனம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் தங்கராஜன், கேரள பல்கலைக்கழக மானுடவியல் துறையின் முன்னாள் தலைவர் கிரகோரி உரையாற்றினர். இந்த 3 நாள் கருத்தரங்கம் நாளை (புதன்கிழமை) நிறைவடைகிறது.

 

Related Stories: