இமானுவேல் சேகரனார் நினைவுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக வீரிய மிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்.

அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே… ஆனால், அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: