சாலையோர உணவு கடையில் முதியவர் சாவு

பாலக்காடு, ஆக.29: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அடுத்த மங்கலம் டேம் சந்திப்பு சாலையோர உணவு கடை பெஞ்சில் முதியவர் உயிரிழந்த நிலையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மங்கலம் டேம் அடுத்த பைதலா பகுதியைச் சேர்ந்தவர் ஜோர்ஜ் (65). இவருக்கு ஷென்ஸி என்ற மனைவி, அநூப், அனீஷ், ஜோபி என மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஜோர்ஜ் மங்கலம்டேம் சந்திப்பு பகுதியில் உள்ள சாலையோர உணவு கடை பெஞ்சில் நேற்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கும் தகவலளித்துள்ளார். பின்னர் வந்த மங்கலம்டேம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து முதியவரின் உடலை போலீசார் மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Related Stories: