தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பாலாலயம்

மதுரை, ஆக. 29: மதுரை வண்டியூரில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலுக்கு விமான பாலாலயம் நடத்தி திருப்பணிகள் மேற்கொண்டு திருக்குடமுழுக்கு நடைபெற இருக்கிறது.

முதற்கட்டமாக நேற்று காலை 8.30 மணிக்கு தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், தெப்பக்குளம் பைரவர் கோயிலில் விமான பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதால் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன், உதவி கமிஷனர்கள், பேஷ்கார்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: