அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பு ஏற்றுமதி பாதிப்பைத் தடுக்க ஒன்றிய அரசு மாற்று ஏற்பாடு: துரை.வைகோ வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ எம்பி அளித்த பேட்டி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் ரூ.4 லட்சம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது ஒன்றிய அரசுகுறிப்பிட்ட 40 நாடுகளை தேர்வு செய்து வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதில் பின்னடைவு ஏற்பட்டால் திருப்பூர், கோவை, கரூர் போன்ற பின்னலாடை உற்பத்தி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பார்கள். எனவே தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இதில் அதீத கவனம் செலுத்தி ஏற்றுமதிக்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: