ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு நடந்த 859 எஸ்ஐ தேர்வை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 859 எஸ்ஐ பதவிகளுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்த பாபுலால் கட்டாரா, ராமு ரைகா ஆகியோர் இதில் சம்மந்தப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட பயிற்சி எஸ்ஐக்கள் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் ஜெயின் இந்த வழக்கை விசாரித்து வந்தார். நேற்று அவர் அளித்த தீர்ப்பில் 2021 காவல் துணை ஆய்வாளர் ஆட்சேர்ப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.
