ஜம்முவில் ஊடுருவ முயற்சி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் குரேஸ் செக்டாரில் உள்ள நௌஷெரா நார்ட் பகுதியில் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் குரேஸ் செக்டாரில் ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு- காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Related Stories: