ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி மற்றும் ராமநாதபுரம் வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியிலும், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி – ஆயில் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட திறந்தவெளி ஏலம் மூலம் உரிமம் பெற்றுள்ளது.

விவசாயிகள், சுற்றுச்சூழல், பொதுமக்கள் நலன்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு எந்த காலத்திலும் அனுமதிக்காது என்ற கொ ள்கை நிலையை உறுதியுடன், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: