பதவி பறிப்பு மசோதா ஜேபிசியில் பங்கேற்பு இல்லை ஆம் ஆத்மியும் புறக்கணிப்பு

புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்படும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் சேர மாட்டோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வகைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் (ஜேபிசி) பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடியும் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மியும் ஜேபிசி குழுவில் சேரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளது.ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பதிவிடுகையில்,ஊழல்வாதிகளின் தலைவர் எப்படி ஊழலுக்கு எதிரான மசோதாவை கொண்டு வர முடியும்? தலைவர்களை போலி வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைப்பது, அரசாங்கங்களை வீழ்த்துவது இதுதான் இந்த மசோதாவின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: