இன்டர்போல் நோட்டீஸ் மூலம் தாதா கும்பலை சேர்ந்தவன் நாடு கடத்தல்: அஜர்பைஜானில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டான்

புதுடெல்லி: ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர்கள், நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள், ரயில்வே ஒப்பந்ததாரர்களை வாட்ஸ்அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஜார்க்கண்டை சேர்ந்த பிரபல தாதா அமன் சாஹு ஈடுபட்டான். கடந்த மார்ச்சில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் சாஹு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவனது கும்பலை சேர்ந்த முக்கிய நபரான சுனில் குமாரை போலீசார் தேடி வந்தனர். இவர் அஜர்பைஜானின் பாகு நகரில் பதுங்கியிருப்பதை தொடர்ந்து ஜார்க்கண்ட் போலீசார் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் விடுத்தனர். இதன் மூலம் சுனில் குமார் பாகுவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தி நேற்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டான்.

Related Stories: