சென்னையில் 2-வது நாளாக கொட்டி வரும் கனமழை: நள்ளிரவு முதல் மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று 2-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் ஏற்பட்டு இருக்கக்கூடிய வளிமண்டல கிழடுக்கு சூழ்ச்சி காரணமாக நேற்று இரவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை ஆய்வு வானிலை மையம் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை நேற்று இரவு விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. அதன்படி நேற்று இரவில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்தது. அந்த வகையில் சென்னை முக்கிய பகுதியான துரைப்பாக்கத்தில் 21 செ.மீ. அளவில் கனமழை பெய்து இருக்கிறது. அடுத்தபடியாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கத்தில் 18 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

பாரிமுனை, அடையாறு 17 சதவீதம் கனமழை, கண்ணகி நகர், நெற்குன்றத்தில் 13 செ.மீ., கொரட்டூரில் 12 செ.மீ. என நேற்று, மாலை, முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சென்னை உட்பட புறநகர் பகுதிகளிலும் கனமழையானது பெய்து வருகிறது. நேற்று அதிகாலை கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை, கனமழை முதல் மிதமான மழை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது

Related Stories: