நெய்வேலி, ஆக. 22: நெய்வேலி வட்டம் 20 பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சிவகுமார்(34). இவர் என்எல்சி இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் மந்தாரக்குப்பம் கடைவீதியில் இருந்து வீட்டிற்கு செல்ல கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடலூரில் இருந்து வந்த சரக்கு லாரி சிவகுமார் பின்னால் இடித்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி என்எல்சி தொழிலாளி பலி
- என்.எல்.சி.
- நெய்வேலி
- சிவகுமாரின்
- சின்னசாமி
- நெய்வேலி தொகுதி 20
- மந்தாரக்குப்பம் சந்தை வீதி
- கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை
- மந்தாரக்குப்பம்…
