சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றிய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
