நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை ஆலோசனைகுழு கூட்டம்

நாகப்பட்டினம், ஆக. 15: நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை சார்பில் ஆலோசனைக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. வேளாங்கண்ணி சமூக ஆர்வலர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். நிறுவனத்தலைவர் நாகூர் சித்திக், செயலாளர் மஹமது மரைக்காயர், டிரஸ்டியும், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் துணைத்தலைவருமான பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் மாவட்ட 4வது புத்தக திருவிழாவில் தன்னார்வலராக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் பாராட்டு சான்று, கேடயம் பெற்ற அறக்கட்டளையை சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து நன்றி கூறினார்.

அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, மழைக்கால சேவைகள் செய்வது, சாலையோரங்களில் உறங்குபவர்களுக்கு போர்வைகள் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆலோசகர்கள் நாகை மோகன், சேகர், நிர்வாகிகள் ராமசாமி, கவிஞர் ஜவஹர், பாலமுரளி, ஷீலா, சகாயராஜ், சண்முகநாதன், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் இணை செயலாளர் அப்துல்பாசித் நன்றி கூறினார்.

 

Related Stories: