‘ஆபாச படங்களை தடுக்க ஒன்றிய அரசு சிறப்பு சட்டம்’ ஜி.கே.வாசன்

மதுரை,: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல இளைஞரணி கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், தெரு நாய்கள் குறித்து நீதிமன்றம் கூறிய கருத்தை வரவேற்கிறேன். மக்கள் நடமாடும் பகுதியில் தெருநாய்கள் இருக்கக்கூடாது. இதை அனைத்து மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை தடுக்க ஒன்றிய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். என்டிஏ கூட்டணி முழு வடிவம் விரைவில் வெளி வரும் என்று தெரிவித்தார்.

Related Stories: