×

அரங்கம் அதிரட்டுமே விசிலு பறக்கட்டுமே… இது கூலி வைப்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி நாளை ரிலீஸ்

சென்னை: ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடங்கும் சன்பிக்ஸர்ச்ஸ் ரஜினிகாந்த் கூட்டணி உருவாகியுள்ள திரைப்படம் கூலி லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் அமீர்கான் , நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே களம் இறங்கி இருப்பதால் எதிர்பார்பை எகிர செய்துள்ளது.

படத்தின் பாடல்கள் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் மோனிகா பாடல் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. மேலும் இப்படத்தில் ரஜினியின் தோற்றமும் ஸ்டைலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளது.

கூலி படத்தின் காலை 9 மணி சிறப்பு கட்சிக்கு இப்போது முதலே கொண்டாட்டநிலைக்கு ரஜினி ரசிகர்கள் சென்றுள்ளனர். சென்னையில் உள்ள திரையரங்குகளில் கட்அவுட் அலங்காரம் dj என கூடிகொண்டாட்டம் இப்போது களைகட்ட துடங்கி உள்ளது.

டெல்லி ,மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் பேனர்கள் அலங்கார வளைவுகள் அமைத்து கூலி கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர் அமெரிக்கா ,மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிகாந்துக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால் கூலி வெளியிடை வரவேற்று ரசிகர்கள் உற்சாகமாக பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

வெளிநாடுகள் வெளிமாநிலங்கள் தமிழ்நாட்டில் முன் பதிவில் சாதனை படைத்துள்ள கூலி திரைப்படம் முதல் நாள் வசூலிலும் பெரும் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெருவிக்கின்றனர்.

Tags : Coolie ,Chennai ,Jailer ,Sun Pictures ,Rajinikanth ,Lokesh Kanagaraj ,Aamir Khan ,Nagarjuna ,Sathyaraj ,Upendra ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...