- பெரும் கூட்டணி
- விஜய்
- இடித்திபதி
- பெருமாள் பொது செயலாளர்
- எடபாடி பழனிசாமி
- சேலம் மாவட்டம் இடிபாடி
- தைதாங்கல்
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியில் 3 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் தான் தைப்பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. குடும்ப அட்டைக்கு ரூ.2500 வழங்கினோம். இந்தாண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் தொடர வேண்டுமென நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். அதிமுக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த போது காவிரி பிரச்னையின் போது நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கி வைத்தோம்.
சுமார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தது அதிமுக சாதனை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும். ரயில் கட்டணம் இன்றைக்கு சூழ்நிலைக்கு தக்கவாறு உயர்த்திருக்கிறார்கள். எரிபொருள் விலை உயர்வு, உதிரி பொருட்கள் விலை உயர்வு, சம்பள உயர்வு இவற்றையெல்லாம் கணக்கிட்டு தான் அவ்வப்போது உயர்த்துவார்கள். குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தவெக விருப்பப்பட்டால் பாஜ கூட்டணியில் சேரலாம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என எடப்பாடியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அது பாஜவின் கருத்து. திமுக ஆட்சியை அகற்ற ஒத்தக் கருத்துள்ள யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்றார் எடப்பாடி.
