தொழிலாளர் உதவி கமிஷனர் எச்சரிக்கை: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்

கோவை, ஏப்.4: தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குப்புராணி தலைமையில் கோவை குனியமுத்தூர் மின் அலுவலகத்தில், நாளை (5ம் தேதி) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெறவுள்ளது. எனவே மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயனடையவேண்டும் என குனியமுத்தூர் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.குப்பைகள் அகற்ற ரூ.170 கோடிக்கு டெண்டர்

கோவை, ஏப்.4: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தூய்மை பணி செய்வதற்காக வரும் 3 ஆண்டுகளுக்கு 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. நகர எல்ைலயில் சுமார் 21 லட்சம் பேர் வசிக்கின்றனர். 100 வார்டுகள் அமைந்துள்ளது.

இதில் 2357 கிமீ தூரத்திற்கு ரோடுகள், 159 கிமீ தூரத்திற்கு வீதிகள், 5,38,170 வீடுகள், 37,330 வணிக கட்டிடங்கள், 9 மார்க்கெட், 3 பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. தினமும் 1250 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஒப்பந்த தூய்மை பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை காட்டிலும் நடப்பு ஒப்பந்த அறிவிப்பில் அதிக அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. நகரில் 4 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் உள்ளனர். தூய்மை பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம், தற்போதுள்ள 4 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குறைந்த கூலிக்கு வடமாநிலத்தில் இருந்து தற்காலிக தொழிலாளர்களை வரவழைத்து பணிக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வீதி தூய்மை பணி செய்தல், வீடு வீடாக குப்பை சேகரிப்பு, குப்பை தரம் பிரித்து, குப்பை வண்டியில் குப்பை சேகரித்தல், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பராமரிப்பு பணிகள் வடமாநில தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையிலான செயல்பாடு கூடாது என ஒப்பந்த தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும். வேறு மாநில பணியாளர்களுக்கு விதிமீறி வேலை வழங்கக்கூடாது. இதற்கு ஒப்பந்த விதிகளை கொண்டு வர வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கவேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்த குறைந்த பட்ச ஊதியமான 721 ரூபாய் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப், கிராஜிவிட்டி முறையாக செலுத்த வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை சோப்பு, மாஸ்க், கிளவுஸ் மற்றும் விபத்து ஏற்படாதவாறு ஒளிரும் வண்ண சீருடை ஒப்பந்ததாரர் செலவிலேயே வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தும் நோக்கத்தில் பழி வாங்கும் வகையில் வேறு மண்டலத்திற்கு மாறுதல் செய்யக் கூடாது.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பங்கமும் விளைவிக்கக்கூடாது என ஒப்பந்த விதிகளில் உறுதி அளிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்ட விதிகளின்படி 8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும். அதற்கு மேல் வேலை செய்யும் பட்சத்தில் அதற்கு உண்டான ஊதியத்தை இரு மடங்காக வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக சுமார் 12 ஆண்டுகள் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய சட்ட விதிமுறைகளை ஒப்பந்த விதியின் கீழ் மாநகராட்சி கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தொழிலாளர் உதவி கமிஷனர் எச்சரிக்கை: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் appeared first on Dinakaran.

Related Stories: