வந்தவாசி, ஆக. 13: வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சரஸ்வதி கட்டிட கூலி தொழிலாளி. இவர் கடந்த 7ம் தேதி அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கிராமத்தில் திருவிழாவிற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறியதை தொடர்ந்து சரஸ்வதி அலறி துடித்து ஓடி வந்தார். பின்னர் அவர் சுவாமி படத்தின் பின்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மூனேகால் சவரன் தங்க நகை திருட போனது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பலே ஆசாமியை தேடி வருகிறார்.
