சென்னை: எதிர்காலம் நமக்கானது, உயர்ந்த கனவுகளோடு அயராது உழைப்போம் என இளையோர் தினத்தை ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் இளையோர் தின வாழ்த்துகள்! இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும். எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலம் நமக்கானது, உயர்ந்த கனவுகளோடு அயராது உழைப்போம்: இளையோர் தினத்தை ஒட்டி துணை முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு
- முதல் அமைச்சர்
- இளைஞர் தினம்
- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திராவிட முன்னேற்ற கழகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
