இங்கிலாந்தில் குற்றவாளிகளுக்கான உடனே நாடு கடத்தல் பட்டியலில் இந்தியாவும் சேர்ப்பு

லண்டன்: வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் நாடு கடத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இங்கிலாந்து தற்போது சேர்த்துள்ளது. இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், ‘‘ இப்போதே நாடு கடத்தல், பின்னர் மேல்முறையீடு திட்டத்தின் நோக்கம் எட்டு நாடுகளில் இருந்து சுமார் மூன்று மடங்காக உயர்த்தப்படுகின்றது. அந்த நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு முன்பு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

மனித உரிமைகள் நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டினர் வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்தின் மேல்முறையீட்டு விசாரணைகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மிக நீண்ட காலமாக வெளிநாட்டு குற்றவாளிகள் நமது குடியேற்ற முறையை சுரண்டி வருகின்றனர். அவர்களின் மேல்முறையீடுகள் இழுத்தடிக்கப்படும்போது பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி உள்ளனர். அது முடிவுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: