திருப்பூர் :உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில், “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.588 கோடியில் சாலைப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 5 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ரூ.10,490 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் மாநகராட்சியில் ரூ.9 கோடியில் நவீன வசதிகளுடன் மாவட்ட மையம் நூலக கட்டடம் கட்டப்படும். ரூ.6.5 கோடியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- அஇஅதிமுக
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருப்பூர்
- உடுமலைப்பேட்டை
- திமுக
- திருப்பூர் மாவட்டம்
