பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து

காலாப்பட்டு, ஆக. 7: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பெரியமுதலியார் சாவடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ரஞ்சித்குமார் (20). இவர் தனது நண்பர் பலராமன் பிறந்தநாள் விழாவை மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து பெரியமுதலியார் சாவடி அருகிலுள்ள இடத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (30) என்பவர் ரஞ்சித் குமார், மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் மகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு குத்தியதில் ரஞ்சித்குமாருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் அவரது நண்பர்களான பலராமன் மற்றும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் கொலை முயற்சி வழக்குபதிந்து மகேஷை கைது செய்தனர்.

Related Stories: