ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் 17 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 17 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 17 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகினர்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பில், உரிய ஆவணங்களை ஆய்வு செய்யாமல் குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் மனுதாரர்கள் 17 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.

Related Stories: