கோவை: உடுமலை அருகே எஸ்.ஐ. சண்முகவேல் கொலை தொடர்பாக ஐ.ஜி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டார். அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் மூர்த்தி, அவரது 2 மகன்களுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது. எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடுமலைப்பேட்டை அருகே உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 6 தனிப்படைகள் அமைத்து 3 பேரை தேடி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. கொலை: ஐ.ஜி. செந்தில்குமார் விளக்கம்
- அஇஅதிமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- ஐஜி செந்தில்குமார்
- கோயம்புத்தூர்
- எஸ்.ஐ. சண்முகவேல்
- உடுமலை
- AIADMK MLA
- மகேந்திரன்
- மூர்த்தி
- எம்.எல்.ஏ மகேந்திரன்
- உடுமலைப்பேட்டை
