×

கனடா ஓபன் டென்னிஸ் சீறிப் பாய்ந்த ஸ்வரெவ் பவ்யமாய் பம்மிய பாபிரின்

கனடா ஓபன் டென்னிஸ், ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (28 வயது, 3வது ரேங்க்) 6-7 (8-10), 6-4, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்சி பாபிரினை (25 வயது, 26வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் வீரராக முன்னேறினார்.

இந்த ஆட்டம் 2மணி 42 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு காலிறுதியில் ரஷ்யா வீரர் கரன் கச்சானோவ் (29 வயது, 16வது ரேங்க்) ஒரு மணி 44 நிமிடங்களில் 6-4, 7-6 (7-3) என நேர் செட்களி்ல் அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்செனை (20 வயது, 34வது ரேங்க்) வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் ஸ்வெரவ், கச்சனோவ் மோதுகின்றனர்.

Tags : Canada Open Tennis ,Zverev ,Babirin ,Germany ,Alexander Zverev ,Alexei Babirin ,Karan Khachanov ,
× RELATED சில்லி பாய்ன்ட்…