ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி:48 பேருக்கு தொற்று

ஈரோடு, டிச.4: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக நேற்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 12,554 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து மொத்தம் இதுவரை 11,980 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 434 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கையானது 140 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>