பாசன தண்ணீர் நிறுத்தம் குறித்து விவசாயிகள் நாளை முடிவு

ஈரோடு, டிச.4: காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் ஆங்காங்கே தொடங்கி உள்ளதையடுத்து விரைவில் தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. இதனிடையே இந்தாண்டு தண்ணீர் நிறுத்தம் செய்யும் காலகட்டத்தில் வாய்க்கால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். தண்ணீர் நிறுத்தம் மற்றும் அட்டவணைப்படி தண்ணீர் திறப்பு காலம் ஆகியவற்றை முடிவு செய்து பொதுப்பணித்துறையினரிடம் தெரிவிப்பதற்கான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நாளை (5ம் தேதி) கொம்பனைப்புதூரில் நடைபெற உள்ளதாக காலிங்கராயன் பாசன சபை மற்றும் மதகு பாசன சபை விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

>