7ம் தேதி வங்கதேச பொதுதேர்தல்

டாக்கா: வங்கதேசத்தில் பொதுதேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக ஆயுத படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் ஷேக் அசீனா தலைமையிலாaன அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு வரும் 7ம் தேதி பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக நாடு முழுவதும் வங்கதேச காவல்படையை சேர்ந்த 147 படைப்பிரிவுகள் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

ஷேக் அசீனா தலைமையிலான ஆட்சியில் எந்த தேர்தலும் நேர்மையாக நடைபெறாது என முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக நாடு முழுவதும் ஏற்கனவே வங்கதேச காவல்படையை சேர்ந்த 147 படைப்பிரிவுகள் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 7ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் பொருட்டு நிர்வாகத்துக்கு உதவ நாடு முழுவதும் ஆயுத படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

The post 7ம் தேதி வங்கதேச பொதுதேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: