500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிலத்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு:

  • கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.5 கோடி நிதி மானியமாக வழங்கப்படும்.
  • மது அருந்துதலுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அப்பழக்கத்தைக் கைவிட மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள மாவட்டந்தோறும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வுப் பிரசாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு. மது அருந்துதலுக்கு எதிரான விழப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் எரிசாராயம், போலி மதுபானம், பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்துதல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து தகவல்கள் தரும் உளவாளிகளுக்கு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் வெகுமதி ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
  • எரிசாராயம், போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.
  • இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் பாதிப்பிற்குள்ளாகும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்காணித்திடவும் கடைகளுக்கு வருகை தரும் நபர்கள் மற்றும் தவறான நோக்கத்தில் வரும் நபர்களை அடையாளங்கண்டு தவறுகளை தடுத்திட. இந்த நிதியாண்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் ரூ.16 கோடி செலவில் பொருத்தப்படும்.
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைப் பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி உதவித் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணப் பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவுப்படும்.
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 2023 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்.

The post 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: