×

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் 1465 அலுவலக ஊழியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 5 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகளுக்கு மேலாக முழு நேர அலுவலக ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், ஒரிசா,சிக்கிம், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டது போல தமிழகத்திலும் செய்து வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும், காலி பணியிடத்தில் விருப்பப்பணி மாறுதல் மற்றும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது, உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu Government Integrated School Education All Employees Union ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்