கட்டணமில்லா பயண அட்டைகளை காண்பித்து மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் பயணம் செய்ய 3 மாதம் நீட்டிப்பு

சென்னை: அரசு பேருந்தில் கட்டணமில்லா பயண அட்டைகளை காண்பித்து மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் பயணம் செய்ய மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பயண அட்டைகளை மேலும் மூன்று மாத காலம் நீட்டித்து தருமாறு பயனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு, 31/03/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/09/2025 வரை நீட்டித்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அனைத்து பயனாளிகளும் எவ்வித சிரமமின்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

The post கட்டணமில்லா பயண அட்டைகளை காண்பித்து மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் பயணம் செய்ய 3 மாதம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: