240 நிமிடம் 2,000 பேர் உலக சாதனை கும்மியாட்டம்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மலையாண்டி கவுண்டனூரில் சக்தி கலைக்குழு என்ற பாரம்பரிய பவளக்கொடி கும்மியாட்ட குழு சார்பில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் கும்மியாட்ட கலைஞர்கள் பங்கேற்று தாள நயத்திற்கு ஏற்றார்போலும், பாடல் இசைக்கு ஏற்றார்போலும் உற்சாக நடனத்தை வெளிப்படுத்தினர். இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 240 நிமிடங்களுக்கு மேல் நடனமாடினர். இதையடுத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பயிற்சி ஆசிரியர் மகாலிங்கத்திடம் உலக சாதனை புத்தக தணிக்கை குழுவினர் வழங்கினர்.

The post 240 நிமிடம் 2,000 பேர் உலக சாதனை கும்மியாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: