24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர தேவை மற்றும் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும்  கட்டுப்பாட்டு அறை எண்களை மாவட்ட கலெக்டர்  ஆர்த்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைபெய்து வருகிறது. பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி, மேல் தளத்திற்கு சென்று பாதுகாத்துக் கொள்ளுமாறும் அல்லது அருகில் இருக்கும் அரசு நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வரதராஜபுரம் மற்றும் மாங்காடு பேரூராட்சிகளை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி, மேல் தளத்திற்கு சென்று பாதுகாத்துக் கொள்ளுமாறும் அல்லது அருகில் இருக்கும் அரசு நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அடையாள அட்டை, கல்விச்சான்று, நிலப்பட்டா பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழிப் பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தங்களின் அவசர தேவை மற்றும் புகார்களை தெரிவிக்க,  மாவட்ட கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட கலெக்டர்   எண். 94441 34000, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் எண். 94450 00903, மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்- 044 27237 107, 044 27237 207, கைப்பேசி மற்றும் வாட்சப் எண். 93454 40662 மற்றும் இலவச அழைப்பு எண். 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: