22 கிலோ புகையிலை பறிமுதல்

 

வத்திராயிருப்பு, ஜூன் 18: வத்திராயிருப்பில் விற்பனைக்கு பதுக்கிய 22 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வத்திராயிருப்பில் அரசு உதவி பெறும் பள்ளி அருகே சப் இன்ஸ்பெக்டர் அய்யனன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கூமாப்பட்டி மேலத்தெரு ராமசாமிபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(31) சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார்.

அவரை சோதனை செய்த பொழுது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து இருசக்கர வாகனம் மற்றும் சுந்தரராஜனிடமிருந்து 22 கிலோ புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தும், விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக சுந்தர்ராஜை வத்திராயிருப்பு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 22 கிலோ புகையிலை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: